மாற்றம்தான்

கணினியில்
கண் புதைந்தால்
கட்டெறும்பு
கடிப்பதும்
களிப்புதான்......!

பள்ளி
படிப்பு
பகுடி என்றால்
பாடப்புத்தகம்
நாடார் கடை
படிக்குதான்.....!

மாலை சீரியல்
சிறப்பென்றால்
வீடு வரும்
கணவனுக்கு
மின் வெட்டுதான்......!

இரு மனம்
சேர்ந்து ஒரு
மணமான பின்
விவாகரத்து
விளையாட்டுதான்.....!

குத்து விளக்கின்
உபசாரம்
பிழையென்றால்
சிவப்பு விளக்கின்
வி....சாரம்தான்.....!

தலைவன்
கள்ளுக்கடை
விருந்தாளி என்றால்
தாலி அடகுக்கடை
அடிமைதான்.....!

சண்டைகளின்
பாதை
கதை என்றால்
கெட்ட வார்த்தைகளின்
பயணம்
தொடர்கதைதான்.....!

மோகத்தின்
தாகம்
வேகமென்றால்
கொலைகளின்
அரங்கேற்றம்
கருப்பையில்தான்.....!

எண்ணங்கள்
சிறுமை
என்றால்
நாகரீகத்திற்கு
பெருமைதான்.....!

எழுதியவர் : ம.கலையரசி (29-Oct-14, 3:38 pm)
சேர்த்தது : ம .கலையரசி
பார்வை : 108

மேலே