ஏழ்மை
அமுதா குட்டி...
நம் குடிசையின் வலப்புறத்தில்
கள்ளிச்செடி ஒன்றை
வளர்த்து வருகிறேன்,
என்றாவது ஒரு "இரவு"...
நம் வீட்டிற்கு வரும் "ஆண்கள்"
என்னை எழுப்பியும்
நான் விழிக்காமல்
உறங்கிக்கிடந்தால்,
அன்று முதல்
அக் கள்ளிசெடிதான்
உன் அம்மா.
அப்பாவின் போட்டோவை
தொட்டு வணங்கிவிட்டு
நீ அவளிடம் சென்று
பால் குடித்துவிட்டு
நிம்மதியாக தூங்கு...
நிரந்தரமாக.