என் மன பாரங்களை யாரிடம் சொல்லிவிட

உன்மௌனங்களை
அர்த்தமாய் மொழிபெயர்க்க
காதலும் வலிகொடுக்க
என் கனவுகள் கனக்குதடி

என் மன பாரங்களை
யாரிடம் சொல்லிவிட
என் தனிமை தாகங்களை
நீ இனிமை யாக்கிவிட

உன் அழகேடுத்து
கண்களால் ரசித்துவிட்டு
மனதில் வார்த்தைகள் யோசித்தால்
அதுதான் என் கவிதை ....

உன் மனமெடுத்து
அதை கொஞ்சம் பேசவிட்டு
என் காதலை கேட்டுவிட்டால்
அதன் உருவம்தான் என் உயிர்

எழுதியவர் : ருத்ரன் (30-Oct-14, 5:20 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 66

மேலே