வலிக்கிறது ஆனால் வலிக்கவில்லை 0048

கண்களை நான் பார்க்கும் போது
எண்ணங்களை காண்கின்றேன்

தூர தேசம் நீ வாழ்ந்தாலும்
என் அருகில் போல் உணர்கின்றேன்

உன் இதயமென்ற சுவர்க்கத்துக்குள்
என் இதயம் வாழவில்லை - ஆனால்
நீ பேசாத நாட்களெல்லாம்
விடியலைக்காணவில்லை

இருட்டுக்குள் மாட்டிக்கொண்டு
உன் விழி ஒளியில் வாழ்கின்றேன்

அணைத்திட தோணுது பெண்ணே
அய்யோ முடியவில்லை

காதலெனும் ஊசிமுனையில்
காத்திருக்கின்றேன் வலிக்கவில்லை
காலமெல்லாம் உன்னோடு வாழ்வதற்கு
யுகங்களாக காத்திருப்பேன்
எத்தனை வலியென்றாலும்......

எழுதியவர் : அ க ம ல் தா ஸ் (30-Oct-14, 11:07 pm)
பார்வை : 93

மேலே