எனது கனவு உன் தோட்டத்தில்

எனது கனவு
இரவு வாய்க்காலில் ஓடுகிறது
பலப் பல வண்ணங்களாக......

பட்டாம்பூச்சிகள் இரவெல்லாம்
சிறகை விரித்து அயர்கிறது
உன்னை அள்ளிக் குடிக்க....

என் காதல் நிலா
வானில் என்கிறாய்
அமாவசை என்பதை மறந்து விட்டு...!

என் காதல் சொல்கிறாய்
காற்றாகி கடலோடு
மயங்கிக் கிடக்கிறேன் மூழ்கி...

சுவாசிக்கத்தான் உயிர்
விதையாகிக் கிடக்கிறேன்
குடை பிடிக்கிறாய்
மழை வேண்டாமென்று...

என் பார்வை அம்பை
வீசுகிறேன் மரக்கிளையில்
வளைந்து கொடுக்கிறது
நீ பறவையாக அமர....

உன் தோட்டத்தில்
வண்ண மலர்கள் எல்லாம்
அடம் பிடிக்கிறது
சிரிக்க மாட்டேனென்று ...

எழுதியவர் : தயா (30-Oct-14, 11:08 pm)
பார்வை : 177

மேலே