வெட்டி வைத்த புதைக்குழி - கொஸ்லந்தை இலங்கை
அவன்
வெட்டி வைத்த
புதைக்குழி...
இயமன்
திட்டமிட்ட
சதியடி....!
சத்தமிட்ட
மழைத்துளி
செய்து விட்ட
பிழையடி.....
விரிந்து போன
பிளவதில்
சரிந்து
போனது
மலையடி.....
இடிந்து விழுந்த
மண்ணதில்
மடிந்து
போனது
மலரடி.....
தூங்கிப்போன
நொடியதில்
தூக்கிப்போனது
விதியடி.....
கழுவிப்போன
நீரதில்
நழுவிப்போனது
வீடடி....
மக்கிப்போன
திக்கதில்
சிக்கிப்போனது
உயிரடி.....
செத்துப்பிழைத்த
சிலருக்கும்
பித்துப்பிடித்தது
பாரடி.....
கட்டிய
மனையும்
கட்டிய
மணவாளனும்
புதைந்து
போனதேனடி....?
பெற்றெடுத்த
செல்வமும்
கண் திறக்கும்
முன்னமே
கருகிப்போனதேனடி.....?
ஒட்டி வந்த
சொந்தமும்
கூட வந்த
பந்தமும்
பிரிந்து
போனதேனடி....?
பள்ளி
பார்க்கும்
முன்னமே
பரலோகம்
பார்த்ததேனடி......?
கண்கள்
பெய்யும்
சிறுதுளி
உள்ளம்
கதறுது
கேளடி......!
( மலையக கொஸ்லாந்தை பிரதேச வாழ் சொந்தங்களுக்கு ஆத்துமா சாந்தி கிடைக்க பிரார்த்திப்போம்)