நிழலும் நிஜமும்
என்னோடு பிறந்து..
என்னோடு வளர்ந்து..
என்னுடனே வருகின்ற..
நான் என்னும் எனது நிழல்
நிஜத்தில் ..
நானே அல்ல!
இந்த நிழலில் விழும்
அடிகள் ..
செல்லத் தட்டுகள்..
நிஜத்தை
பாதிப்பதில்லை!
இது பலருக்கு
புரிவதில்லை!
புரிந்தும் மறந்திடும் போதுதான்
எனக்கும் கூட
சந்தோஷமும்..
துக்கமும்..
தெரிகிறது..
சில நேரத்திலே!