செல்லமே
![](https://eluthu.com/images/loading.gif)
காரணம் இல்லாமல் கண்ணீர் வருவதில்லை ...
என் கண்மணி நீ அழும் காரணம் தெரியவில்லை..
இதயத்தில் இருந்து வரும் ரத்தத்திற்கு கூட பதில் கிடைத்து விடும் ...
என் இதயமே நீ அழுவது எதற்கென்று புரிந்து கொள்ள மறு ஜென்மம் வந்து விடும்..
காரணத்தை தெரிந்துகொள்ள ஆசை...
உன் கண்ணீர் நின்றுவிட்டால் மனதில் தீரும் கவலை ஓசை ....
தாலாட்டு பாடி நிறுத்தட்டுமா உன் கண்ணீரை..
தலையை ஆட்டி ஆட்டி பொம்மையாக மாறி தடுத்து நிறுத்தட்டுமா உன் கண்ணீரை
ரத்தம் சுடுகிறது உன் கண்ணீரை நிறுத்தாமல்
உள்ளம் குமுறுகின்றது...
இறைவன் கொடுத்து வரம் நீ...
இதயமே என் உயிரும் நீ...
எடுத்து சொன்னாலும் உனக்கு புரியவில்லை..
உணர்ந்து கொள்ளு செல்லமே நீ என் கையில் இல்லை...
உணர்வுகளுடன் உன் தந்தை ....
உள்ளங்கையில் உன் நிழல் படத்துடன் உணர்வுகளை புரிந்து கொண்ட உன் தந்தை...
விலை இல்லா செல்வமே ...
விலை உயர்ந்த தொலைபேசியுடன் ...
வெளிநாட்டிலிருந்து உன் தந்தை....
என் செல்லமே....