மழையே உன்
நீர் கொள்ளும் மேகங்கள்
நிழலாகின்றன
நிழல் தந்த மேகங்கள்
மழை ஆகின்றது
மழைகொண்ட பூமி
மழலை ஆகின்றது
புத்தம் புது மலர்கள் பயிர்கள் செடிகள்
உட்பட மனித மனங்களும் முகங்களும்
உள்ளூர உள்ளூர களிப்பினால் சிலிர்ப்பினால்
செழிப்படைந்து புதுப் பிறவி எடுக்கின்றன
பிறந்த பயனை அடைந்திட மழையே நீ வேண்டும்
உயிர்கள் பிழைத்திட உன் அருள் வேண்டும்
பாரினில் மக்கள் பாங்குடன் வாழ்ந்திட
பருவங் கொண்ட பண்பாடும் மழையே
பட்டி தொட்டி எல்லாம் பாடி வருவாய் பருவ மழையே