மழைத்துளியோடு என் காதல்

கொட்டி சிதறிடும்
முத்து
மழைத்துளியே....
உன்னை கட்டி
அணைத்திட
ஆசை கொண்டேன்
என்னை
விட்டு விலகிடும்
அர்த்தமென்ன .?
நீ
கொள்ளை அழகென்ற
ஆணவமா..?
இல்லை
மண்ணை கொஞ்சி
அணைத்திட்ட
ஆனந்தமா....!!!!

எழுதியவர் : கயல்விழி (1-Nov-14, 3:25 pm)
பார்வை : 417

சிறந்த கவிதைகள்

மேலே