இவள் அழகிப் போட்டிக்குச் செல்வதில்லை
தினமும்
முகம் விரித்து
பல வண்ணங்களில்
அரிதாரம் பூசுகிறாள்
பல முறை
யோசனை செய்து
நல்லதொரு
வாசனையை
தன் மேனியெங்கும்
பூசிக்கொள்கிறாள்
பார்பவர் எவரும்
மயங்கும் அழகிருந்தும்
இவள்
அழகிப்போட்டிக்குச் செல்வதிலை
அனைவரிடமும்
ஏதோ சொல்ல
நினைக்கின்றாள்
இந்தப் பூக்கள்
பேசும் மொழியை
அறிந்தவர்
யாரேனும் உண்டா ?