நரம்பினை விரட்டும் நடுக்கம் - இராஜ்குமார்

நரம்பினை விரட்டும்  நடுக்கம்   - இராஜ்குமார்

நரம்பினை விரட்டும் நடுக்கம்
=============================

நுரையில் நுழைந்த
சுவாசம் எல்லாம்
அறைக்கு வெளியில்
திரியுமடி ...!

வன்முறை விதைத்த
வசந்தம் வளைந்து
புனிதம் புதைக்க
விரையுமடி ..!

பிழைகள் விரும்பிய
திருத்தம் முழுக்க
உண்மை அழித்தே
உலவுமடி ..!

துளைகள் வெறுத்த
வெற்றிடம் நிலைத்து
வழியை மறைத்து
நிற்குமடி ..!

துயரம் துளைத்த
வாழ்வின் பாகம்
சமூகம் வெறுத்து
திட்டுமடி ..!

வேடம் விரும்பிய
தேகம் சரிந்து
வறுமை இணைத்து
நனையுமடி ..!

சேற்றில் தெளித்த
வண்ணம் மிதந்து
வாசல் செருப்பில்
சிரிக்குமடி ...!

வெடிப்பில் வீசிய
விதைகள் எல்லாம்
நடிப்பில் மட்டுமே
முளைக்குமடி ..!

காதலை வரைந்த
கவிதை புள்ளியும்
நரம்பில் சுயமிழந்து
நடுங்குதடி ..!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Nov-14, 8:41 pm)
பார்வை : 271

மேலே