நட்பின் சான்று
நட்பின் சான்று:
இருபாலரும்
சூடிகொள்ளும்
ஒரே பூ நட்பு
இது பிறந்த பின்னே
கொண்ட உறவல்ல
பிறக்கும் முன்னே
பெற்ற வரம்
பொம்மைகள் கொடுக்கும்
குழந்தை பருவத்தில்
தொடங்கி,,,,,,
கல்லூரில் தேர்வுத்தாளை
திரும்பி கொடுக்கும் வரை
தொடர்ந்து,,,,,,,
இறக்கும் இறுதி நொடி வரை
மாறாமல் இருக்கும்
மகத்துவமே நட்பின
தத்துவம்
உன் ஒரு விழியில்
தூசி விழுந்தால்
பல விழிகளில்
நீர் வடியும்
தன்னலம் மற்றதே
நட்பின் தனித்துவம்
இது உறவுகளால்
வரைப்பட்ட ஓவியம் அல்ல
இறைவனால் வாழ்வதற்கு
உருவாக்கபட்ட வரைபடம்
நட்பு வாடைகாற்றில்
உதிரும் பூவல்ல
வானம் வயதாகி
உதிரும் வரை உள்ள பூ
நட்பு
மனிதன் எடுத்த மறுபிறவி
கருணையின் பிறப்பிடம்
சுயநலத்தின் இறப்பிடம்
இரக்கத்தின் இருப்பிடம்
விசுவாசத்தின் மறுவுருவம்
இந்த மனிதபிறவி
புனித நட்பினால்
பூர்த்தி அடைகிறது
இரு இதயங்கள் கொண்ட
காதலுக்கு இறப்பில்லை என்றால்,,,,,,
பல இருதயங்கள் கொண்ட
நம் நட்பிற்க்கு ஏது
மரணம்???????????
பி.வேலுச்சாமி,
இளங்கலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு,
தேசிய கல்லூரி,
திருச்சி_620001..
7639219356