பதிவுத் திருமணம் - பெற்றோரின் பிணம் முன்

பதிவுத்திருமணம்
~~~~~~~~~~~~~~~~~
அன்னையிடம் சம்மதம் கேட்டான்
அவள்மீது சத்தியம் கூடாது என்றாள்
தந்தையிடம் கேட்டான் வேறு ஜாதி என்றார்
இறுதியில் அவனே சென்றான்
அவளுடன் பதிவு அலுவலகத்திற்கு
இரண்டு மாலைகள் இரண்டு நண்பர்கள்
ஒற்றைக் கயிறுடன் இனிதே முடித்தான்
திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது
இருஜோடி மாலைகள் மிகுதியாக தேவைப்பட்டது
ஒருஜோடி அவனது பெற்றோருக்கும்
மற்றொன்று அவளது பெற்றோருக்கும்
அவன் கட்டிய கயிறில் நெரித்துக்கொண்டே
தன்னை மாய்த்துக்கொண்டாள் அவள்
தண்டவாளம் சென்றே தானும் தலை இழந்தான்

- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (2-Nov-14, 8:58 pm)
பார்வை : 149

மேலே