மறந்து விடவில்லை நானும்

வானத்தில் நெளிவதில்லை
வண்ண பட்டங்கள்

குருவிகளை வைப்பதில்லை
வீட்டின் சட்டங்கள்

சாலையை மிதிப்பதில்லை
மிதிவண்டிகள்

கிராமங்களில் ஓடுவதில்லை
டயர் வண்டிகள்

ஐந்து காசுக்கு விற்பதில்லை
கமர்கட்டுகள்
பத்து காசுக்கு நிகரில்லை
இந்த கரன்சி நோட்டுகள்

ஒளியில் ஒலிவதில்லை
வெள்ளிகிழமைகள்
ஓய்வில் ஒழியவில்லை
வெள்ளித்திரைகள்

என் இரவில் தெரிவதில்லை
பகல் சூரியன்

கனவில்கூட வருவதில்லை
நிஜ சூரியன்

இவற்றை கடந்துவிடவில்லை
காலம்
அவற்றை மறந்துவிடவில்லை
நானும் .....

எழுதியவர் : (3-Nov-14, 8:17 pm)
பார்வை : 213

மேலே