உணர்வுகளின் ஊர்வலம்

*
உணர்வே உணர்கிறேன்
ஒரு நாள் அதுவே
தேர்வு நாள்
*
அப்பா சொல்லுறாரு அம்மாகிட்ட
காலைல சுருசுருப்பா எழுந்துக்குற
சேவலே கொழம்புக்குத்தா போகுது
சோம்பேறியா கிடக்குற உன் மகன்
வீணாத்தாண்டி போவா
*
உணர்வே அப்பொழுது உணர்கிறேன்
உன்னை கட்டுபடுத்த நினைக்கவில்லை
ஊர்வலமாக இட்டு செல்கிறேன்
*
தேவனிடம் இந்த உணர்வில் உருகினேன்
அவனது காலடியில் மண்ணாக்கினேன்
இருந்தாலும் என் உணர்வு உருகி கொண்டே இருந்தது
*
அமைதி பூங்காவில் சென்று
அமர்ந்து அழதுவிட்டேன்
மலர்களும் கண்ணீர் சிந்துதே
என் உணர்வில்
*
தூக்கத்தில் இட்டு சென்றேன்
என் கனவுகள் உணர்ந்து
உலர்ந்து விட்டன
*
கண்ணீர்யென சொட்டியது உணர்வே
தீயென மாறியதே அந்த உணர்வோடே
ஆரம்பித்தேன் படிக்க
*
அப்பா வார்த்தைகள்
வாய் வழுக்கி விழுந்தாலும்
நான் நிலையா நிற்கதானு
உணர்ந்தேன்
(பன்னீர் செல்வம்,பிகாம் (சிஎஸ்)சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,வேல்றாம்பெட் ,பாண்டி )பன்னீர்கார்க்கி@ ஜி மெயில்.காம்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (3-Nov-14, 9:18 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 70

மேலே