வானத்தின் முகம் வெளுத்தது ஏன்
அன்று ஒருநாள் ....
உலகம் முழுதும்
ஒருமணி நேரத்தில்
நனைந்து விடவேண்டும் -
வானம் சவாலுடன்
வரவழைத்தன கரு மேகங்களை ...
கரு மேகங்கள் வானத்தில்
கருத்துக் கூடின
மின்னலும் இடியும்
பின்னிட மழை பெய்தது --
ஊரெல்லாம் வெள்ளம்
ஓடியது-----
குளம் குட்டையெல்லாம்
நிரம்பி வழிந்தன -
என்னவள் குடை
எடுத்து சென்றாள்- அதனால்
அவள் தலை நனையவில்லை.
வானத்தின் சவால் அவளிடம்
தோற்றதால் .....
வானத்தின் முகம்
வெளுத்துப்போனது .