ஒலிப்பெருக்கி ஹெட்போன்

எப்போதும் கைகளில்
கலைந்து விளையாடும் உன்னை
கவனக்குறைவால் தொலைத்துவிட்டேன். . .
காதில் எப்போதும் ரீங்காரம் பாடி
காதல் முற்றிய காதணி அழுகையை
காதில் வாங்காமல்
காணாமல் போகதே. . .
தட தட பயணமோ
தனியான இரவோ
தொல்லையென எண்ணாமல்
தொங்கிக்கிடந்தாய் என் கைப்பேசியொடு. . .
தொலைவில் நீ செல்ல
நெருங்கி வருகிறது தனிமை. . .
உன் நீல உடலில் சிக்கெடுக்க
சிலநேரம் சினம்கொண்டு இழுத்திருந்தால்
சீராக சிரம் தாழ்த்தி
மன்னிப்பும் கேட்கிறேன்
சிங்கார கலைபொருளே
கை வந்து சேர்ந்துவிடு. . .
கண்ணாமூச்சி வேண்டாம்
என்
கண்ணெல்லாம் கலங்கிடுத்து
காலில் கூட விழுகிறேன்
கண்ணில் கொஞ்சம் தென்படு. . . !