கனவில் வந்தான் கண்ணன்

அடர்ந்த வனம்தனில்
ஆரவாரமற்ற இடமது
எழிலான இயற்கையை
ரசித்தபடி நான் அவன் மடியில் ..

புல்லாங்குழல் எடுத்து
அவன் இசைக்க
பூவை நான் என்னை
மறந்தேன்...

கோபியரின் கண்ணனவன்
கொஞ்சாமல் இருப்பானோ
குறும்புகள் செய்திடவே
கோபிப்பதாய் நான் நடித்தேன்

மாலையிட வேண்டும் என்றான்
மணமக்களாய் நாங்கள் நின்றோம்
வாழ்த்தினர் வானவரும்
வணங்கியே தாள் பணிந்தேன்

தொட்டு என்னை தூக்கு கண்ணா
அரைத்தூக்கத்தில் நான் புலம்ப
அதட்டினாள் அன்பு தங்கை ..
பாவி மறைந்து விட்டான் மாயகண்ணன்

சொப்பனத்தில் நான் கண்ட
சுகமான வாழ்வு இதுவே ..:-) :-)

எழுதியவர் : கயல்விழி (5-Nov-14, 7:32 am)
பார்வை : 263

மேலே