அம்மா

œ எனக்கு உயிரக் குடுக்க நீ செத்துப் பொழைச்ச
என் உடம்ப வளக்கவே நீ ஓடாக ஒழச்ச
நா மிச்ச வச்ச சோற, நீ அள்ளித் தின்ன
வழி ஒன்னு இல்லையே, உன்ன வார்த்தையில சொல்ல

மழ தண்ணி வீடெல்லாம் நெரம்பிப் போச்சுதடி
அள்ளி அள்ளி ஊத்துறதே உனக்கு வேலையா ஆச்சுதடி
நோயொன்னு எனக்கு வந்தா உன் ஒடம்பு எளைக்குதடி
உன் பாசம் நினச்சா எம்மேனி இங்க சிலிர்க்குதடி
 
பக்கத்துல இருக்கையில உன் பெருமை நா அறியலயே
பிரிஞ்சு நானும் போகையிலே புதுப் பாசம் ஏனோ புரியலையே
கல்லுக் கூட கரையுமடி உன் கஷ்டத்தப் பாத்து
குளிர் ரொம்ப அடிக்குதடி , என்ன உன் சேலையிலப் போத்து 
 
நா உன்ன திட்டும் போது வார்த்தைக்குக் கூட வலிக்குமடி
அந்தப் பாவத்தத் தீக்க பூமியில வழி ஒன்னு இருக்குமோடி
நா சிரிக்க வேணுமுன்னு நீ செதஞ்ச இந்த மண்ணுல
என்னால, நீ சிரிப்பதக் கேட்டு ஆனந்த மழ வருது கண்ணுல
 
துக்கத்திலும் தூங்க வைக்குது உன் முந்தான வாசமே
 நீ மெதுவா விடும் மூச்சிலும் இருக்குதடி பாசமே
அன்பு என்ற சொல் அதற்கு அர்த்தம் நீதானே
நீ அழாம இருக்க, உன் வருத்தம் சுமப்பேனே

எழுதியவர் : சித்ரா (5-Nov-14, 11:12 am)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : amma
பார்வை : 229

மேலே