உன்னை சிந்தித்தால்

உன்னை சிந்தித்தால்..!!!
*********************************
கானல் நீரிலும் தாகம் தணிக்கிறேன்
-----உன்னை சிந்தித்தால்..!!!
உயிரோடே பற்றி எரிகிறேன் கருகாமல்
......உன்னை சிந்தித்தால்..!!!
சூடுசொரணை மானவெட்கம் மறந்து போகிறேன்
......உன்னை சிந்தித்தால்..!!!
ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் உன் முகம்மட்டும் தெரியுதடா
......உன்னை சிந்தித்தால்..!!!
உடைந்து விட்ட என் சிறகுகளில் ஏனோ பூப்பூக்குது
......உன்னை சிந்தித்தால்..!!!
உதறிபோய்விட்ட உறவுகள் முழுதும் உப்பற்றஉணவாய் ஆகிமறையுது
......உன்னை சிந்தித்தால்..!!!
ஒன்றுமில்லா உதவாக்கரையாம் எனக்கும் ஞானம் கிடைக்குதே
......உன்னை சிந்தித்தால்..!!!
தாலியொன்று கேட்காமலே தாரமாகிபோனேன்
......உன்னை சிந்தித்தால்..!!!
இரவுபகல்,நேரங்காலம் , இடம்பொருள் அனைத்தும் தொலைத்து விடுகிறேன்
......உன்னை சிந்தித்தால்..!!!
இறைவனை வணங்காது இமைமூடி உனை யோசிக்கிறேன்
......உன்னை சிந்தித்தால்..!!!
செய்வதறியாது பயண ஊர்தியில் யாரையோ பார்த்து புன்னகைக்கிறேன்
......உன்னை சிந்தித்தால்..!!!
சமையல் நல்லா இருக்கென்று அம்மா சொல்கிறாள் , காரணம் சொல்லவா
......உன்னை சிந்தித்ததால் என்று ..!!!
மறந்து போய்விடு என்று உனை விரட்ட மனமில்லையடா
......உன்னை சிந்தித்தால்..!!!
நேசம் பொய்யாகிப்போயவிடில் என்னாவேன் என்ற இடிகளும் அவ்வப்போதுண்டு
......உன்னை சிந்தித்தால்..!!!
மழையில் நனைந்து பனியில் குளிர்வதின் அருமை புரியும்
......உன்னை சிந்தித்தால்..!!!
கட்டியணைக்காமலே காமத்தேனை ருசிக்கிறேன்
.......உன்னை சிந்தித்தால்..!!!
வாகனத்தில் ஏறாமலே பயணிக்கிறேன்
.......உன்னை சிந்தித்தால்..!!!
கற்பனை கயிற்றை அனுமதிவேண்டாது கட்டவில்கிறேன்
......உன்னை சிந்தித்தால்..!!!
பிறகென்ன,
கவியறியா பேதை நானும் இன்று கவிவடிக்கிறேன்
......உன்னை சிந்தித்தால்..!!!
C.CATHERINE JENNI CHRISTY
M.SC [COMPUTER SCIENCE]
Dr.SNS Rajalakshmi College Of Atrs & Science
Chinnavedampatti,
Coimbatore-49