கனவு நாயகன்

என் மூச்சிலே கலக்கும்
உரிமை அவனையே சேரும்
--அவன் பேச்சிலே கவலை
எல்லாம் அழகாய்த் தீரும்

அவனைக் கண்ட அந்நொடி
--பனியைப் போல உரையும்
அன்றுமுதல் என் நெஞ்சம்
--அவன் நினைவாலே நிறையும்

நிலாக்கூட அவனைக் காண
--திசை மாறி எழும்
அழகிய சிலைக்கூட அவனை
--வேண்டி உயிரொன்றைப் பெறும்

நான் அவனோடு நடக்க
--வழி வாழ்த்தொன்று பாடும்
அவனை நான்கண்டு ரசிக்க
--விழி இன்னொன்று வேண்டும்

பார்த்தவுடன் என்னைப் படிக்க
--அவன் பார்வைக்குத் தெரியும்
விரல் கோர்த்தவுடன் பாதைகள்
--மொத்தம் அழகாய் மாறும்

அவன் என்மடியிலே படுக்க
--மனதிலே மழையொன்றுத் தூறும்
கவலையின்றி நான் கிடக்க
--அவன் காலடிமட்டும் போதும்

எழுதியவர் : சித்ரா (5-Nov-14, 11:36 am)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kanavu naayagan
பார்வை : 110

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே