கிராமத்துப் பெண்

அதிகாலை பொழுது
அவிழ்த்துவிட்ட மேகங்களாய்
அவள் நினைவு..

அந்த கிராமத்து மண்வாசம்
நினைக்கும் போதே நனையும் விழிகள்...

வழி தேடி விரைந்த ஆற்றின் கால்தடங்கள்..
கல்லும் மண்ணும் கலந்த கிராமத்து சாலை.

என் பூர்வீக இடம் நோக்கி என் பயணம்..

நான் பூச்செடி வளர்த்த இடத்தில்
ஒரு கான்கிரீட் கர்டன் ..

என் ஞாபக கூண்டில் இருந்து
சிரகடித்துபறக்கும் சிட்டுக்குருவியின் முனகல்கள் ...

எதிர் வீட்டில் பூத்திருந்த ஒற்றை ரோஜா அவள்..
என் பருவத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்தது ..

அவளுக்கு அதிகபட்சம் பதினாறு படர்திருக்கும்..

விழியோரம் பருவம் வழியும்
அதில் வழியெங்கும் பூக்கள் நெளியும்..

ஆடை ,அது அவசியம் தேவையான வயது
சில சொற்களை இங்கு சொல்லாமல் மறைப்பது அரிது..

இரட்டை ஜடை ஊஞ்சல் ஆடும்..
அதில் பூவும் ,ரிப்பனும் தாளம் போடும்..

மாநிறப்பூ அவள்
பூவின் வாசம் , நிச்சயம் அவள் மேலும் வீசும்..

வளையல்கள் சப்தம் என் அப்போதைய போதை ..
நான் மீண்டும் பாதை தேடிப் போவது எதை?

அந்த வண்ணநிலா நாட்களை நுகரப்போகிறேன்
நான் பறித்தெடுத்த பூக்களோடு வாழப்போகிறேன் ...

அவள் பார்வைக்காய் காத்திருந்த நாட்களில்
ஒரு முழு நிலவு முழுவதுமாய் மறைத்திருந்தது..


தொடரும்... க . நிலவன் ...

எழுதியவர் : க . நிலவன் (5-Nov-14, 2:06 pm)
சேர்த்தது : க நிலவன்
பார்வை : 255

மேலே