சுறு சுறுப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
மங்களூரின் மைக்கேல் டிசோசா
சுறுசுறுப்பாய் இருப்பதற்கும்..
விறு விறுப்பாய் பணி செய்வதற்கும்..
உடற்பயிற்சி செய்கிறாராம்..தினம்
உவகையுடனே வாழ்கிறாராம்..!
வாடகைக் கார் ஓட்டும் இவர்
ராணுவத்தில் வண்டி ஒட்டியவராம்..
மேல் நாட்டு கார் எதனையும்
லாவகமாய் ஓட்டும் இவர்
பழகுதற்கும் இனியவராம்!
போன மாதம் பிறந்த நாள்
இவருக்கு..!
வயது நூறு !
..