புயல் வெள்ளம் ஹைக்கூ

பொன்னிறமான நெல்மணிகள்
அறுவடைக்கு காத்திருக்கின்றது
அழித்துவிட்டது புயல்வெள்ளம்.
*
விவசாயியின் உழைப்பு
நீர்சூழ்ந்த வயல்
மிதக்கின்றன பயிர்கள்.
*
வரப்பு உயரவில்லை
வாழ்க்கை உயரவில்லை
அழிவின் விளிம்பில் விவசாயி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (6-Nov-14, 9:46 am)
பார்வை : 233

மேலே