ஒரு முத்தத்தின் விலை எவ்வளவு தெரியுமா

ஒரு முத்தத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் தன் மனைவிக்கு ஒரு மெயில் அனுப்பினான்.
என் அன்பு மனைவிக்கு, இந்த மாதம் என்னால் பணம் அனுப்ப இயலாது. அதற்க்கு பதிலாக நூறு முத்தங்களை அனுப்புகிறேன், எனக்கு தெரியும்
என் முத்தங்களை விட உனக்கு பணம் முக்கியமாக இருக்காது என்று.
-அன்புடன் உன் கணவன்.
அதற்க்கு மனைவி இப்படி பதில் அனுப்பினாள்….
அன்பு கணவருக்கு,எனக்கு உங்கள் முத்தங்களை விட பணம் முக்கியமல்ல…. அந்த முத்தங்களை எப்படி சிலவு செய்தேன் என்று விபரம் சொல்கிறேன்.
இந்த மாசம் பால் வாங்கிய பாக்கிக்காக பால் காரனுக்கு ஐந்து முத்தமும்,
மின்சார கட்டணமாக அவனுக்கு பத்து முத்தமும்
நான் வாடகைக்கு இருக்கும் வீட்டு உரிமையாளரிடம் வாடகைக்கு பதிலாக முப்பது முத்தங்களையும்
மளிகை சாமான்களுக்காக மளிகை கடைக்காரனுக்கு இருபது முத்தங்களையும் கொடுத்துவிட்டேன். என்ன ஆச்சர்யம் இவர்கள் அனைவரும் நான் கொடுத்த முத்தங்களை ஏற்றுக்கொண்டார்கள். மீதி இருக்கும் முப்பத்தைந்து முத்தங்களை வங்கியில் சேமிக்கலாம் என்று போனேன். வங்கியின் மேனேஜர் முத்தத்தோடு வேறு எதையோ எதிர்பார்க்கிறார் போல….இப்போது நான் என்ன செய்ய…..உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

எழுதியவர் : கிருஷ்னா (6-Nov-14, 4:14 pm)
பார்வை : 249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே