வாழ்கை ஒரு வளைகோடு
' சிவம் 'என்னும்
சொல்லுக்கு
'மங்கலம்' என்று பொருள் ...
' சி ' இல் ஒரு வளைகோடு மாறி
' ச ' வானால் ...
'சவம்' என்றாகி
அமங்கலப் பொருளாகிவிடுகிறது ...
வாழ்க்கையும் ஒரு
வளைகோடு போன்றதுதான் ..
வளைந்து கொடுப்பவன்
வாழ்கை எப்போதும்
மங்கலமாக இருக்கும் ..
வளைந்து கொடுக்காதவன்
வாழ்கை அமங்கலமாக இருக்கும் .