யாருக்காக

மழை பெய்து ஓய்ந்தது..!
மக்கள்..சாலைகளில்..!
மறுபடியும்..மழை..!
சாலை வெறிச்சோடியது..!
படுத்துக் கிடக்கின்றான்..
அவன்..!
மழை நின்ற போதும்..
பெய்த போதும்..
எப்போதும்..!
பாதை ஓரத்திலே!
காணவில்லை..
என்று எந்த பிரசுரத்திலும்
அவன்.. இல்லை..!
இது வரையில்!
தேடியிருப்பாள்..ஒருத்தி மட்டும்..
அவளும் இன்று ..
உயிரோடு இல்லை!

எழுதியவர் : கருணா (6-Nov-14, 4:36 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : yarukkaga
பார்வை : 405

மேலே