+பிரியம் கொடுத்திடு+
நீ முயலோ மயிலோ
===கயலோ குயிலோ
நீ மானோ தேனோ
===மணியோ கனியோ
நீ மழையோ தளையோ
===இலையோ வலையோ
நீ வானோ நிலவோ
===யாரோ எவரோ
எனையேன் பிடித்தாய்
===கவிதைகள் கொடுத்தாய்
மனதில் குதித்தாய்
===மயக்கவில் தொடுத்தாய்
அடியேன் பாவம்
===பிரியம் கொடுத்திடு
துடிக்கும் இதயத்தில்
===பிரியாமல் நிலைத்திடு