எப்பவும் ஆம்பளநான் நாட்டுப்புறப்பாடல்

எப்பவும் ஆம்பளநான்.!(நாட்டுப்புறப்பாடல்}

தாத்தாதாத்தா போயிரிச்சா டண்டணக்கா போட்டிரிச்சா
ஆத்தாவுக்கு சேதிபோச்சா ஆளனுப்பி விட்டாச்சா.
ஊரெல்லாம் கூடியாச்சா உறவுகூவி அழுதாச்சா
பாடையேறி படுத்தா பரலோகம் அடுத்தா?
வாடைநாறும் முன்னே வாரிப்போட வாங்க.

வாடிவாடி அன்னக்கிளி ஓடியென்ன தேடிவந்த!
கூடிக்கூடி பேசலாமா ஓடிஓடி ஆடலாமா?
பாட்டியில்லா நேரம்பாத்து லூட்டிபண்ண வந்தாயடி.
தூக்கிஎன்ன நிறுத்து தோதுபாத்து பொருத்து.
வாக்குப்படி நானும் வயலெழுதித் தாரேன்.

காலயிப்படி விரிச்சிக்கிட்டு கோலஅப்படி கிடத்திக்கிட்டு
வாசப்படி அடச்சிக்கிட்டு வழிவிடாம மறிச்சிக்கிட்டு
பெணம்போலக் கெடந்தீருன்னா மனம்போல எண்ணாதோ?
வாயுங்கிழிஞ்சி போச்சு பாயுங்கிழிஞ்சி போச்சு
சாயுங்காலம் ஆச்சு மேயுங்காலம் போச்சு.

சின்னக்கிளி சிறுக்கிநீ சிக்குனுதான் இருக்குரீயே!
என்னப்பிடி எழுப்பிநீ இக்குனுயேன் சிரிக்கிரீயே!
சின்னவீடு நீயானா என்னவேணும் நீகேளு
கன்னக்குழி கெரக்கம் கரைக்கும்ஒரு மயக்கம்!
உன்னத்தொட நெனப்பும் உருகுதடி எனக்கும்.

வயசான பெரியவரே வாய்க்கொழுப்பு சின்னவரே!
இளசான வயசுப்பொண்ண நைசுப்பண்ண பாக்குரீரே!
பாட்டிஎங்க போய்த்தொலஞ்சா பழையமோரு தீந்த்துருச்சா?
எழும்பி நிக்கிமாவிறப்பு எதுக்குஇந்த மொறப்பு.
அழைக்கு அங்ககாடு அய்யாபோயி படுங்க!

வயசென்ன ஆயிப்போச்சு பழசென்ன ஆறிப்போச்சு?
எனக்கென்ன தேஞ்சிபோச்சு இருப்பென்ன மாறிப்போச்சு?
இப்பக்கூட ஆம்பளதான் எப்பவும்நான் மாப்பளதான்.
பழக்கமெனக்கு இருக்கு பாட்டிசொன்ன கணக்கு.
பழுத்தபழம் இனிக்கும் பழசுதாண்டி ருசிக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (7-Nov-14, 12:10 am)
பார்வை : 108

மேலே