மாண்புமிகு குப்பைகள்- சந்தோஷ்

வடதுருவத்தில்
ஆடைகிழிக்கப்பட்ட நிலையில்
சதையில்
குருதி நிறைத்து
அடிவயிற்றில் வலியை அமுக்கி
உடலுறவு அறியா
உடலுறவில் சிதைந்த
சிறுமியொருத்தியை சுற்றிலும்
அரக்கர்களின் விந்துக்கள்
வன்கொடுமை குப்பையாக, ...!

இதோ
தென் துருவத்தில்
வயிறு நிறைக்க
வலைவிரித்த மீனவர்களை
கழுத்துநெரித்து கச்சத்தீவு
எல்லை வியாக்கியனம்
பேசிப்பேசியே
லங்கத்தீவு காட்டுபன்றிகள்
எங்கள் மீனவக்குடும்பங்களை
கடற்கரையில் ஒதுக்கி
சோகமுகத்தில் வழியும்
உப்புக்கண்ணீர் துளிகள்
துரோகத்தின் குப்பையாக..!

கிழக்கு மேற்கு
வடக்கு தெற்கு
திசைக்கொர்
அரசியல் மாச்சரியங்களில்
அழுக்குக்களை சுமந்த
அரசியல்வியாதிகளின்
எச்சங்கள் மொத்தமாக
பாரதத்தாயின் உடலை
துண்டாடிய லஞ்சக்கத்திகளின்
முனைகளிலும்

பாரதத்தாயின் சேலையை
கிழித்த ஊழல்முட்களின்
முனைகளிலும்

லட்சம் லட்சமாக
கிழுட்டு மந்திரிகளும்
அசட்டு அதிகாரிகளும்
குப்பையாக
துர்நாற்றமெடுக்கும் குப்பையாக..

அந்த பாரளுமன்றமே
வட்டிவடிவ
குப்பைத்தொட்டியாக....!
நாங்கள் தேர்ந்தெடுத்த்
பொறுக்கிகளும்
கிராக்கிகளும்
அந்த தொட்டியில்
கவுரப் குப்பையாக..

எமக்கு
காட்சிப்படும்போது.........
இந்திய அரசாங்கமே..!

துடைப்பத்தை ஏந்தி.
நீ ” தூய்மை இந்தியா” என்று
கூப்பாடு போட்டு
விளம்பர போதையில்
கூத்தடிக்கிறாயோ ?

ஆளும் நாட்டில்
கூட்டவேண்டியது எது ?
கழிக்க வேண்டியது எது?
பெருக்க வேண்டியது எது ?
என்று எதுமறியாமல்
எப்படியய்யா ஆள வந்தீர்கள்
எனதருமை
மாண்புமிகு குப்பைகளே !


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (7-Nov-14, 8:01 pm)
பார்வை : 186

மேலே