துடுப்பில்லா ஓடம் போல் தள்ளாடும் என் வாழ்க்கை
தங்கைக்கு திருமணமாம்
தமக்கைக்கு புகைகிறது
சாடையாய் ஒரு பேச்சி
எதோ குறையிருக்கு போல
என்ன செய்ய பவம் பெரியவள்
அனுதாபமாய் சில கிண்டல்கள்
துரதிஷ்டகாரி உன்னால் தான்
தூற்றுகின்றனர் உறவினர்
எரிஞ்சி விழுந்தால் சித்தி
என்னால் தானே அவமானம்
மண்டியிட்டாள் தங்கையவள்
தயக்கம் வேண்டாம் கண்ணம்மா
நான் உன் தமக்கையடி
தேற்றி விட்டேன் நான் அவளை
என்னவனே உன்னால் தானே
எனக்கு இந்த வேதனைகள்
என்றோ நீ தந்த காதலினால்
ஏற்க முடியவில்லை
இன்னொரு வாழ்வுதனை .
வலி சுமக்கும் உள்ளத்திற்கு
வீண்பழி சுமக்க முடியவில்லை
விழிநீர் தரை நனைக்க
நான் துடிக்கின்றேன் புழுவாக ..
""'''கண்ணீரில் கயல்"