பெண்மை
பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...
பெண்மை என்பது உண்மை,
பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...
பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...
பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்