எனது வருங்காலம்
பாட்டாய் நான் வந்தால்
சுரமாய் நீ வருவாய்
நடனமாய் நான் வந்தால்
அசைவுகளாய் நீ வருவாய்
ஓவிய மாய் நான் வந்தால்
தஊரிகையாய் நீ வருவாய்
சித்திரமாய் நான் வந்தால்
வர்ணகளாய் நீ வருவாய்
பேச்சாய் நான் வந்தால்
சொற்களாய் நீ வருவாய்
மழையாய் நான் வந்தால்
துளியாய் நீ வருவாய்
மண்ணாய் நான் வந்தால்
துநிக்கையாய் நீ வருவாய்
எரி தணலாய் நான் வந்தால்
தீக் குச் சியாய் நீ வருவாய்
பிறருக்கு அன்பைக் கொடு
எனக்கு ஆற்றலை கொடு
உனக்கு ஓர் வருங்காலத்தை கொடு
வருங்காலத்துக்கு ஓர் நேசத்தை கொடு
உன்னை நீயே உய்த்துணர்.