விண்ணும் வில்லும்

வியக்கும்விண் மயக்கும்வில்லுடன் தனிமை கொள்ளுதோ
நகையாடிய நண்பர்தனை புறம் தள்ளுதோ
************************************************************************************
விண் : வில்லே! விந்தை கொள்ளும்
உன்நிறம் எஞ்சிந்தைக் கொல்லுதே
உனை நிந்தித்தாலும் நினைவால்
நிறை நெஞ்சம் கரைகிறதே…
.
வில் : என் மனம்போல் நின்மனம்
நினைவால் சிறை கொண்டதோ
மலர்த்தேனாய் இனிப்பன இன்று
பாகல் காயாய்க் கசந்தனவோ
.
விண் : மலருமோ, மடியுமோ
என்றுமருவிய எனக்குன்
மனமுணர்ந் துரைத்தாயே
.
வில் : நின்நினைவில் நிறம் வெளுத்தேன்
என்னுயிரை உமக் களித்தேன்
களித்தேன், துடித்தேன் இன்று
உரைத்தேன் நிலவு சாட்சியாய்
.
விண் : நான் மகிழ்வாய்த் தெளிவாய்
எனுளம் மகிழும் நேரம்
சூழும் நண்பர்க் கூட்டம்
என் நிலை தாழ்ந்து
அழுதிடும் வேளை மறைவனரே
நீயோ எந்துன்பந் தனில்
முகங்காட்டி ஒளி வூட்டினாயே
ஆயிரம் மீன்கள் நீந்தும்
என்னுலகில் உனைப்போல் எவறுமிலர்
வியந்த எனை மயக்கினாய்
கரு மேகம் மறைத்த
எனை அழ கூட்டினாய்
சொல் காதல் என்பது எது?….

எழுதியவர் : பிரவீன் ராசா (8-Nov-14, 11:43 am)
பார்வை : 68

மேலே