தாய் பாசம்

'
'கன்னம் சுருங்கி
தோல் சுருங்கி
கண்பார்வை மங்கி
வயதாகியும்
தன் உழைப்பால் வாழும்
ஜீவனை பார்கையில்
குசலம் விசாரித்து
நேரம் வருகையில்
வருகிறேன் என்று திரும்பிய போதும்
என் கைல காசு இல்ல டா தம்பி
உனக்கு கைசெலவுக்கு கொடுக்க
என்று எங்கும் அம்மாவின் கண்களில்
கண்டேன் பாசத்தை
உணர்ந்தேன் சாட்டையடி மனத்தால்
நான் ஏதும் கொடுக்காமல்
மனத்தால் நானும் நிஜமாய்
அவளும் பிரிதோம்
நிரந்திர பிரிவல்ல என்றாலும்
நிஜமாய் வலி நெஞ்சில்

எழுதியவர் : ருத்ரன் (8-Nov-14, 4:00 pm)
Tanglish : thaay paasam
பார்வை : 55

மேலே