முகவரி

இது நமக்கான முகவரி
தேடிடும் பயணம் -அது
முடிகின்ற போது
தொடங்கிடும் மரணம்

கணம் கணமாய் வாழ்கை
கடக்கின்ற போது
பணம் பணம் என்பதையே
பதுக்கிட தோன்றும்

அலை கடலாய் மனம்
அலைந்திடும் போதும்
மலை மலையாய் பல
கனவுகள் தோன்றும்

வந்தவர் போவது
வாழ்க்கையின் நியதி
போனவர் பின் வாழ்வது
பிறருக்காய் வாழ்ந்த
பண்பாட்டின் கூறுகளே

நம்பிக்கையுடன் தேடுகிறோம்
நம்வாழ்க்கை முகவரிகளை

எழுதியவர் : இணுவை லெனின் (8-Nov-14, 5:33 pm)
சேர்த்தது : இணுவை லெனின்
Tanglish : mugavari
பார்வை : 178

மேலே