“பல்லுணர்வு மிளிர் பாவல மாமணி-2014” விருது

அன்புடை தோழமை நெஞ்சங்களே..

2014ஆம் ஆண்டின் விருதளிப்பு அறிவிப்புகளின் பகுதிக்குள் முழு மன நிறைவோடு நுழைகிறேன்...காரணம் தளத்தில் நமது மனங்கவர் படைப்பாளி “நண்பர்” ஒருவருக்கு ஒரு விருது அளிப்பதில் முழு மகிழ்ச்சியும் பேரானந்தமும் என்னில்...!!

உறவுகளின் வலைப்பின்னல் ,மானுட பாசம் , பெறுதலின் உவகை , , , இழப்புகளின் துக்கம் மலரும் நினைவுகளின் மகிழ்ச்சி மண் விடுதையின் மாண்பு ,மதங்களில் மானுடம்.......இவை பற்றியெல்லாம் எவரேனும் அறிய எழுத விரும்பினால் இவரின் மொத்த படைப்புகளுள் இவைகளை வாசிக்கலாம்..

இங்கு போலிகள்>./தேடல்கள்../ஓர் ஆலமரத்தின் கதை../..விலங்கு சூத்திரம்.../பாவம் இவன்../மருந்து கசந்தது../சிந்திக்க ஒரு நொடி.../வயசான வாலிபம்.../சாமி குற்றம்../திரை மறைவு../....போன்ற படைப்புகள் வாசித்து மகிழுங்கள்...வாசித்து பாருங்கள் இவரின் படைப்புகளை...

2013ஆம் ஆண்டின் விருதுகள் தோழர் ராஜேஷ்குமாரில் தொடங்கும் பொழுது நான் பெற்ற அதே உவகையோடு இவரின் விருதோடு மட்டற்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் பெறுகின்றேன்...

2014ஆம் ஆண்டின் விருதாக “பல்லுணர்வு மிளிர் பாவல மாமணி-2014”எனும் விருது பெறும் இவர்....யார்...?

இந்த பிசிராந்தையாரின் கோப்பெருந்தேவன்...
தளத்தின் எனது உற்ற அபிக்கு ஒப்ப உள்ள தோழன்..........
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சுசிந்திரன் ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“பல்லுணர்வு மிளிர் பாவல மாமணி-2014”
விருது பெறும் தோழர் .சுசிந்திரன் வாழ்க...வளர்க...
*************************************************************************************************************************


வாழ்த்துவோம் வாருங்கள்..

அகன்

எழுதியவர் : அகன் (9-Nov-14, 12:13 pm)
பார்வை : 153

மேலே