இறைவா-கட்டளை கலித்துறை

அன்பின் வடிவே அருளைப் பொழிந்திடும் ஆண்டவனே
முன்பின் இலாவொரு தூயவா! அல்லாஹ் முறையுடனே
என்பின் இடரெதும் வாரா வகையினில் என்றுமுனை
நம்பித் தொழுதே வளமுடன் வாழ நலமருளே

அஞ்சித் தொழுதுனை என்றும் சிறப்புக்கள் அத்தனையும்
நஞ்சாம் கொடியவை அண்டா திருந்திடும் நல்லருளை
கெஞ்சி இறைஞ்சிடும் பிள்ளை இவன்குரல் கேட்டுடனே
வஞ்சித் திடாவுன் வளமையின் கைத்தரும் வல்லவனே

ஆடி அலுத்தேன் உடலும் களைத்தேன் அகிலமெலாம்
ஓடி அயர்ந்தேன் உருப்படி யானது ஒன்றுமில்லை
பாடிப் பழகிப் பலகவி தந்தேன் பரவசமாய்
நாடி உனையே சரணடைந் தேனின்று நாயகனே

செல்வம் பதினாறும் தந்தென்னை எந்நாளும் சேமமுடன்
கல்வி குறையரக் கற்றுத் தெளிவித்துக் காத்திடணும்
நல்வினை யாவையும் நான்பெறும் நல்லருள் நல்கிடனும்
வல்வினை நீக்கும் இறைவா ! உயிர்களில் வாழ்பவனே

எழுதியவர் : அபி (9-Nov-14, 11:18 am)
பார்வை : 121

மேலே