ஒரே ஒரு ஊரிலே

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜாவாம்...
ஒரே ஒரு ராஜாவும்
தானியங்கி ராஜாவாம்...
தானியங்கி ராஜாவுக்கு
தளபதிகள் இருவராம்...
தளபதிகள் இருவருக்கும்
தங்கப் பூட்டு தொங்குமாம்...
தங்கப் பூட்டின் சாவிகள்
ஆலோசகர் கையிலாம்...
ஆலோசகர் வேலையே
ஆலோசனை செய்வதாம்...
ஆலோசனை எதற்கென்று
ஆலோசனை செய்வராம்....
தானாய் இயங்கும் ராஜாங்கமே
ததிங்கின தோம் போடுதாம்...
தானியங்கி ராஜாங்கம்
தானாய் இயங்கும் நாள் வருமா ? ? ?