வண்ணக் கலவையின் வசீகரம் ​

​வண்ணக் கலவையின்
வசீகரப் பார்வையா !
எண்ணத்தில் வழிந்திடும்
ஏக்கமிகு பார்வையா !

வீழ்த்திடும் விழிகளின்
காந்தவழி தாக்குதலா !
துரத்திடும் இதயங்களை
திருத்திடும் இருவிழிகளா !

வரைந்திட்ட ஓவியத்தில்
கரைந்திட்ட காவியமா !
வளர்ந்திட்ட கன்னியிவள்
புலர்ந்திட்ட விடியலிவள் !

ஈர்த்திடும் சக்தியவளா
இழுத்திடும் மின்சாரமா !
மங்கையின் மறுபுறமோ
கங்கையின் புகழுருவோ !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Nov-14, 9:37 pm)
பார்வை : 200

மேலே