சிந்திப்பாய் மனிதா
எண்ணில் அடங்கா
குறைகள் என்னில்
அதிகமதிக மிருக்குது
கண்ணில் தெரிந்தும்
பிழைகள் மண்ணில்
தவறிடாமல் நடக்குது!!
விண்ணில் இருந்து
ஈசன் அவனின்
அறிவுரைகள் இருக்குது
பாவி மனதில்
பதிந்திடாமல் தள்ளி
தூர இருக்குது!!
எண்ணி மனதில்
தன்னை உயர்த்த
சின்னவிடம் நாடுது
நல்ல குணம்
அவனை விட்டு
தூர விலகி ஓடுது!!
கவசம் அது நல்லவைகள்
களைந்து ஓடிப் போகுது
தீயவைகள்
தானாய் வந்து
அவனைப் பிடித்து
ஆட்டுது!!
கண்ணியதில் சிக்கியவன்
சிதைந்து வீழ்ந்து
மடியத்தானே போகிறான்
எழுந்து துணிந்து
மீண்டிடவே
மனிதா நீயும் உதவுவாய்!!
ஜவ்ஹர்