காவிரி
கண்ணாவென ஓடிவரும் அன்னைக்கு
அணை என்னும் விலங்கிடாய்,
பூட்டியது போதாதென இன்னும்
பெரிதாக்க போராடுகிராய்,
அங்கே இடப் பற்றாக்குறை என்ற போதெல்லாம் அவளை வீடுவரை
பார்க்க மட்டும் அனுப்புகிராய்,
பாசத்தாலும், பசியாலும் வாடிக்க்கிடக்கிண்றோம்...
என்று? நம் அன்னைக்கு
விடுதலை தருவாய்
சகோதரா...

