மொழி சிதைத்தார்

வீண்பேச்சுப் பேசிடுவோர்
வீரரவர் தன்னாட்டினிற்கே
தீது செய்வார்!

வீண்வாதம் தானுரைப்பார்
வீணரவர் விண்ணுலகம்
போய் உறைவார்

வாய்ப்பதனை நழுவ விட்டு
ஆடுகின்றார் பாடுகின்றார்
வாழ்க அன்னார்!

நற்றமிழில் நஞ்சு கூட்டி
டமுக்கு டப்பா
இசை என்பார்!

தமிழ்ப் பகைவரிவர்
வாழ தாய்த்தமிழை
கொலை செய்கின்றார்!

இசைப்பவனும் நற்றமிழன்
இதைக்கேட்பானும் செந்தமிழன்
எப்படியோ வாழ்கின்றார்!

கலப்படமே இல்லாத
கலைகளையே காணேனோ
இத்தமிழ் நிலத்தில்!

எழுதியவர் : கருணா (10-Nov-14, 4:36 pm)
பார்வை : 125

மேலே