வழித்துணை
நிலவுக்கு நானும்
எனக்கு நிலவும்
வழித்துணையானோம்
வீடு வந்ததும்
நானும் நிலவும்
தனித்தனியானோம்
உலவும் காற்று வருடி அழைத்தது
ஜன்னல் வழியினிலே
ஜன்னல் திரைக்கு பின்னே
என்னை நிலவு அழைத்தது
பேச்சுத்துணைக்காக
இரவு முழுவதும் பேசிப்பேசி
இருவரும் தூங்கிப்போனோம்
காலை சூரியன் சுட்டு எழுப்ப
திடுக்கிட்டு எழுந்தேன்
தூரத்தில் மேகத்துக்கு ஓரத்தில்
நிலவுத் தோழன் ஒளிந்து கொண்டான்
நாளும் வேலையில் கழிய
நேற்றை போல மாலை வேலையில்
மீண்டும் பயணம் தொடர்ந்ததுவே
நிலவுக்கு நானும்
எனக்கு நிலவும்...