மாண்டாலும் உயிர்த்திடுவேன்

அன்பை ரொக்கமாய் கொடுத்து
அடிமையானேன் உன் இதயத்தில்
அன்பே அதை இழந்திடுவேனோ...
அச்சம் என்னில் தொற்றிக் கொள்வதேன்
ஆழ்மனதில் இலவச இணைப்பாய்.......
உன் மௌனத்தால் தினம் மாண்டாலும்
ஆயுள் பெற்று உயிர்த்திடுவேன்
அன்பு ஆராதனை அபிசேகத்தால்.....
கவிதாயினி அமுதா பொற்கொடி