வாங்க கவிதை எழுத

சின்ன மகிழ்ச்சி - கீறும்
மனக் காயம் சீறும்
சினம் கண் முன்
தினம் காணும் அவமானம்
மழலைதன் புன்னகை
மலைகளின் மாட்சி பரந்த
வயல்களின் பசுமை நீர்
நிலைகளின் தண்மை தளிர்
நிலவின் மௌனம் குளிர்
இரவின் நீளம் வரும்
விடியலின் வர்ணம்
சுடும் பகலின் வன்மம்
கடும் பகையின் சீற்றம்
தொடும் அலையின் முயற்சி
ஆழ் கடலின் அமைதி
சூழ் உலகின் சுமை எனும்
நீள் வரிசைத் தொடர்......
உம்மை கவிதை யாக்க
ஊக்கினால் - யாப்பு தளை
சீர் எதுகை மோனை
சந்தி சந்தம் இலக்கணம்
அணிகள் யாவும் அறியோம்
என பம்மி யிராதீர்
எண்ணத்தை இனிதாய் கவிதை
கிண்ணத்தில் தாருங்கள் தளத்தில்
அன்னமாய் பருகும் தங்கை
அண்ணன் பலர் உண்டு - நாளை
உங்கள் கவிதையும் புது
இலக்கணமாய் திகழும்
பின் குறிப்பு;
"காதலின் காய்ச்சல் அதில்
வீழ்தலில் வலி"
விட்டுவிட்டென், முதல் பத்தியில் எங்காவது சேர்த்துக் கொள்ளுங்கள்.