வழி தேடினோம் வாழ

வெள்ளை காரதேசம் இங்கே
வெள்ளிப்பனி வீசும்
யாரும் வேர்த்து போனதில்லை
நம்பி தோத்து போனதில்லை

யாதி மத சண்டையெல்லாம்
இங்கே கிடையாது
வீதி தெரு எல்லாம்
கட்சி கொடிகளும் கிடையாது

ஆனும் பெண்ணும் சமம் என்று
சமத்துவம் வாழும் -இங்கு
சீதன பேய் பிடித்து
வாழவில்லையே யாரும்

தாலி வேலி இல்லாமலே
தம்பதி வாழும் -அதில்
தனி மனித சுதந்திரம்
தலைமை வகிக்கும்

சொல்லாமல் வரும்
மழை போல வந்து போகும்
மின்சாரத்தடை இங்கில்லை
பொறுமை இழந்தும்
போக்கு வரத்து
காத்திருக்க தேவையில்லை

ஊரில் கதவை திறந்தால் தூசி
இங்கு கதவை திறந்தால்
நடுங்கவைக்கும் ஏ.சி (ac.)

கால்கள் போன பாதை வழி
கண்டம் தாண்டிவந்தோம்
வலிகளை தாண்டி
வழிகளை தேடி
வாழ்ந்து விட்டுப்போவோம்

மகிழ்வோடு தமிழோடு .


... லெனின் ..

எழுதியவர் : இணுவை லெனின் (12-Nov-14, 6:32 pm)
பார்வை : 66

மேலே