விழியதிகாரம் - 9 -சந்தோஷ்
போருக்கு முந்தைய
பயற்சியேதும் பயன்றிடாத
ஓர் அப்பாவி மன்மதன்
நான் ..!
என் தேவதையே..!
ஏனிப்படி..?
உன் புருவநாணில்
விழியம்பை தொடுத்து
காதலாய் பாய்கிறாய்..!
இமைமூடி இன்ப
வலியில் துடித்தாலும்
இதயம்திறந்து உன்காதலுக்கு
வழிக்கொடுத்து வரவேற்கிறேன்.
தொடு... தொடுத்துக்கொண்டேயிரு..!
உன் விழியம்பில்
உன் வெறியன்பை..!
விடு விடுத்துக்கொண்டேயிரு...!
உன் பார்வைபாதையில்
நம் காதல் ஓடத்தை..!
ஆடு ஆடிக்கொண்டியிரு
உன் முழிப்பாவனையில்
உன் வெட்கநாட்டியத்தை..!
உன் விழிப்பார்வை
மார்கழியில் தீயாகி -அதில்
எரிவது நானாக வேண்டும்
சித்திரையில் குளிராகி- அதில்
நடுங்குவது நாமாக வேண்டும்.
ஒரேயொரு ஆசையிருக்கு
என் விழியதிகார நாயகியே...!
ஓர் அடர்ந்த காட்டுக்குள்
பறவைகளின் கீச்கீச் எனும்
சங்கீதம் ஒலிக்கேட்டும்
ஓர் இருட்டு குகைக்குள்
ஒரு சிறுத்தீயின் வெளிச்சத்தில்
காதல் போதையேறிய கலவரத்தோடு
நாமிருவரும் எதிரெதிராக
அமர்ந்துக்கொண்டு.....
உன் விழிப்பார்த்து பார்த்தே
என் கண்கள் துடித்துடிக்க
என் விரல்கள் இனிக்க இனிக்க
ஓராயிரம் விழியதிகாரம்
கவிதையெழுதிட
அதை நீ படித்திட
குகையிலிருக்கும் காதல்பறவைகள்
சிறகடித்து பாராட்டவேண்டும்....!
விழியாளே..! என் நாயகியே..!
என் கவிதை காட்டிற்குள் .
எப்போது வரப்போகிறாய்...?
காதல் கர்வத்தில்
திமிர்ப்பிடித்த விழியழகியே.!
எப்போது வரப்போகிறாய்..!
--------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.