அறிவுள்ள ஜீவன்
ஒரு கிராமத்தில் திருவிழாக் கூட்டத்தில் பிரிந்துவிட்ட தன் தாயைக் காணாமல் அழுது கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அவளால் தன் தாயைத் தேடி கண்டறிய முடியவில்லை. மூத்தோர்கள் சிலர் அச்சிறுமியின் தாயைத் தேடிக் கொண்டிருந்தனர்.
அதே கிராமத்தில் புல்வெளியில் இடைச் சிறுவன் ஒருவன் தன் பசுவை மேயவிட்டு அதன் சிறு கன்றினைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.திடீரென்று பசு மந்தை அவனுக்கும் பசுவுக்கும் இடையில் புகுந்தது. பசுக்களில் பல அவனுடைய பசுவைப் போலவே இருந்ததால் அவன் தன் பசுவை அடையாளம் காண முடியாமல் தவித்தான்.
திடீரென்று அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அவன் தன்னிடமிருந்த கன்றினை கீழே விட்டதுதான் தாமதம் .அது தடுமாறாமல் நேராகத் தன் தாய்ப் பசுவிடம் ஓடிச் சென்றது. ஆறு அறிவுள்ள சிறுமிக்கு இல்லாத ஞானம் ஐந்தறிவுள்ள கன்றுக்கு இருப்பது பெரிய விந்தை அல்லவா?